tamilnadu

தஞ்சாவூர் மற்றும் தரங்கம்பாடி முக்கிய செய்திகள்

சாலையில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி 4 பெண்கள் பலி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சத்திரத்தில் பொங்கலையொட்டி சிறப்பு ஜெப வழிபாடு புதன்கிழமை மாலை நடந்தது. இதில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதி கள் மற்றும் பெங்களூர், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கா னோர் வந்திருந்தனர். இதில் தஞ்சாவூர்– திருச்சி பைபாஸ் சாலை சர்வீஸ் ரோட்டில் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கார் ஒன்று, அவர்கள் மீது மோதி யதில் பெங்களூரு நேதாஜி நகரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி கவிதா (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பால கிருஷ்ணன்(42), பெங்களூரு நேதாஜி நகரைச் சேர்ந்த செல்வி(45), இவரது மகள் கீர்த்தி (20), கன்னியம்மாள் (48), ஜோதி, காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம்  திருநகரைச் சேர்ந்த சத்தியநாராயணன் (42), காரில் பயணம் செய்த இவரது தந்தை ராமச்சந்திரன் (68), தாய் ரேவதி (65) ஆகிய 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இதில் புதன்கிழமை நள்ளிரவு செல்வி, கீர்த்தி மற்றும் வியாழக்கிழமை அதிகாலை கன்னியம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து வல்லம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் கேங்மேன் தேர்வு பயிற்சி முகாம்

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், மயி லாடுதுறையில் வருகிற 19 அன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கேங்மேன் எழுத்து தேர்வுக்கான பயிற்சி முகாம் ஆர்.ஓ.ஏ கட்டிடத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் எஸ். சிவராஜன் தலைமையில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின், மாநில துணைத் தலைவர்கள் ரெங்கராஜன், இராஜாராமன், திட்ட செயலாளர் எம்.கலைச்செல்வன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். மின்சார பாதுகாப்பு  மற்றும் முதலுதவிகள், தாழ்வழுத்த, உயர் அழுத்த மின் கருவிகள், பொது அறிவு ஆகிய பாடங்கள் பயிற்சியாக அளிக்கப்படவுள்ளன.

திருவள்ளுவர் படம் வழங்கல்  

தஞ்சாவூர், ஜன.16- தமிழ்வழிக் கல்வி இயக் கம் சார்பில் திருவள்ளுவர் ஆண்டு பிறப்பை கொண்டா டும் வகையிலும் திருவள்ளு வர் உருவப் படம் வீடுகள், கடைகளுக்கு வழங்கப் பட்டது.  தை மாதம் முழுவதும்  தொடர் செயல்பாடாக திரு வள்ளுவர் உருவப்படத்தை வழங்கும்  பணியை தமிழ் வழிக் கல்வி இயக்கம் தமி ழகம் முழுவதும் மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேராவூரணி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், இல்லங்களு க்கு திருவள்ளுவர் உருவப் படம் வழங்கப்பட்டது.  தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் பொறுப்பா ளர்கள்  சின்னப்பத் தமிழர், மெய்ச்சுடர் வெங்கடேசன், பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற் றோர் ஆசிரியர் கழக தலை வர் பழனிவேல், ஆயர் ஜேம்ஸ், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் திருவேங்க டம், தமிழக மக்கள் புரட்சி கழக பொறுப்பாளர் நீல கண்டன், மதியழகன் கலந்து கொண்டனர்.  மேலும் திருக்குறள் சுவரொட்டியும், தமிழ் வழிக் கல்வியின் அவசி யத்தை வலியுறுத்தும் துண்ட றிக்கையும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் விளையாட்டு விழா  

தஞ்சாவூர், ஜன.16- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஏனாதிகரம்பை மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொங்கல் விளை யாட்டு விழா நடைபெற்றது. ஜேசிஐ கீரமங்கலம்- பேரா வூரணி சென்ட்ரல் சார்பாக நடைபெற்ற விழாவிற்கு கே.சரபோஜி தலைமை வகித்தார். அம்மையாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகை வி.முத்துராம லிங்கம் விழாவை துவக்கி வைத்தார்.  போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு எலும்பு முறிவு மருத்துவ நிபு ணர் து.நீலகண்டன் பரிசு வழங்கிப் பாராட்டிப் பேசி னார். ஜேசிஐ மண்டலத் தலை வர் விஜயராஜ், உறுப்பி னர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், சமுதாய விழுது கள் இளைஞர் நற்பணி மன் றத்தினர் பங்கேற்றனர்.

குடிபோதை தகராறில் இருவர் வெட்டிக் கொலை 

தஞ்சாவூர், ஜன.16–  தஞ்சாவூர் வடக்கு வாசலை சேர்ந்தவர் சக்தி வேல் (36), கூலித் தொழி லாளி. இவரும், இரட்டை பிள்ளையார் கோயில் தெரு வைச் சேர்ந்த செபஸ்டியான் (26), விளார் சாலை தில்லை நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (26), ஆகிய மூவரும், வடக்கு வாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில், இரு தினங்களுக்கு முன்பு இரவு மது அருந்திக் கொண்டி ருந்தனர். அப்போது, குடி போதையில் இவர்களுக் கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தக ராறு ஏற்பட்டது. இதில், சக்தி வேல், செபஸ்டியான், சதீஷ் குமார் அரிவாளால் வெட்டப் பட்டனர். பலத்த காயம டைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.   தஞ்சாவூர் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செபஸ்டியான், வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். தொடர்ந்து, சதீஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, வடக்கு வாசல் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், வெங்கடேசன், சூர்யா ஆகிய மூவரை தஞ்சாவூர் மேற்கு காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

;