tamilnadu

தஞ்சாவூர் மற்றும் இராமநாதபுரம் முக்கிய செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள்

தஞ்சாவூர், ஜன.10- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திரு த்தம் 2020 தொடர்பான பணி கள் 23.12.2019 முதல் தொ டர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜன.11 (சனிக்கி ழமை) மற்றும் ஜன.12 (ஞாயி ற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அனைத்து வாக்கு ச்சாவடிகளில் வாக்குச்சா வடி நிலை அலுவலர்கள் போ திய அளவிலான விண்ண ப்ப படிவங்களுடன் காலை 9.30 மணி முதல் மாலை 5.30  மணி வரை பணியில் இரு ப்பார்கள்.   தஞ்சாவூர் மாவட்ட  பொதுமக்கள் இவ்வாய்ப்பி னைப் பயன்படுத்தி, ஜன. 11,12 ஆகிய இரு நாட்களில்  நடைபெறும் சிறப்பு முகா ம்களின் போது தாங்கள் வசி க்கும் பகுதிக்கு அருகா மையில் உள்ள வாக்குச்சா வடிக்கு சென்று, வாக்காளர்  பட்டியலில் தங்கள் பெயர்  பிழையின்றி இடம் பெற்று ள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 22.01.2020 வரை மேற்படி விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும். வாக்குச்சா வடிக்கு சென்று படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.in  என்ற இணைய தளம் முகவரி  வழியே ஆன்-லைன் மூலமா கவும் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

அறந்தாங்கி வழியாக ரயில்சேவை நவாஸ்கனி எம்.பி., கோரிக்கை

இராமநாதபுரம், ஜன.10- அறந்தாங்கி வழியாக ரயில் சேவையை மீண்டும் தொடங்கவேண்டுமென இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி ரயில்வே அமைச்சரை வலியுறுத்தியுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை. இது குறித்து மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி கூறியிருப்பதாவது:- அறந்தாங்கி சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கோரிக்கை அறந்தாங்கி மார்க்கத்தில் ரயில் சேவையை மீண்டும் தொடங்கவேண்டும் என்பதாகும். அறந்தாங்கி பகுதியில் ரயில்வே தடம் அமைக்கப்பட்டு கேட் கீப்பர் முறையாக நியமிக்கப்படாததால் ரயில்கள் நிறுத்தப்பட்டு, நீண்ட நாட்களாக  ரயில்கள் முறையாக இயக்கப்படாத நிலை உள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்து உடனடியாக ரயில் சேவை தொடங்க வேண்டும்.  அறந்தாங்கி வழியாக மயிலாடுதுறை- காரைக்குடி, அறந்தாங்கி வழியாக இராமேஸ்வரம்-  சென்னை எழும்பூர் செல்லும் கம்பன் விரைவு வண்டி ஆகியவற்றை மீண்டும் இயக்கவேண்டும்.  மயிலாடுதுறை- அறந்தாங்கி- மதுரை, இராமேஸ்வரம்- அறந்தாங்கி-காரைக்குடி-திருவாரூர் வழியாக தாம்பரம் ஆகிய வழித்தடங்களில்  புதிய ரயில்கள் இயக்கவேண்டும். அறந்தாங்கி வழியாக சரக்கு ரயில்களும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தஞ்சையில்  மீன்வள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், ஜன.10- தஞ்சாவூர் மாவட்ட மீன்து றை உதவி இயக்குநர் அலுவ லக கட்டுப்பாட்டில் காலியாக  உள்ள மூன்று மீன்வள உதவி யாளர் பணியிடங்களை நிர ப்பிட தகுதியான நபர்க ளிடமிருந்து விண்ண ப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.  இனவாரி சுழற்சி அடிப்ப டையில் (மிகவும் பிற்படு த்தப்பட்டோர் (MBC) ஆத ரவற்ற விதவை (முன்னு ரிமை பெற்றவர்) ஒரு பணி யிடமும்,  பிற்படுத்த ப்பட்டோர் (BC) (முன்னு ரிமை பெற்றவர்)  ஒரு பணி யிடமும், பொது பிரிவில் முன்னுரிமை இல்லாதது ஒரு பணியிடமும் என மொத்தம் மூன்று மீன்வள உதவியாளர் காலிப்பணியிடங்களை நிர ப்பிட தகுதியான நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இப்பதவிக்கு தமிழில் எழு தப்படிக்க பேச தெரிந்தி ருக்க வேண்டும். நீச்சல் தெரி ந்திருக்க வேண்டும். மீன்பிடி  வலை பின்னுதல் தெரிந்தி ருக்க வேண்டும். பழுத டைந்த வலையினை செப்ப னிடுதல் தெரிந்திருக்க வேண்டும். வீச்சு வலை வீசு தல் தெரிந்திருக்க வேண்டும்.  மேற்கண்ட பணியி டத்திற்கான தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தஞ்சா வூர், கீழவாசல், எண்.873/4 அறிஞர் அண்ணா சாலை யில் இயங்கும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவ லகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் 24-1-2020 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முக தேர்வுக்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ண ப்பதாரருக்கு பின்னர் தெரி விக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

தென்னங்கன்றுகள் வழங்கல்

நாகப்பட்டினம், ஜன.10- 2018 நவம்பர் 15 அன்று வீசிய கஜா புயல், வேதாரணியம் பகுதி யைக் கடுமையாகத் தாக்கியதில் ஏராளமான தென்னை மரங்கள்  அடியோடு வீழ்ந்தன. தோட்டக்கலைத் துறை, வனத்துறை, தொண்டு நிறுவனங்கள் சார்பில் வேதாரணியத்தின் பல்வேறு பகுதிகளில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்ட போதி லும், பாதிப்பைச் சரிசெய்வதாக இல்லை. இதனால், தோட்டக்க லைத் துறை சார்பில், கரியாப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலை வர் ரவிச்சந்திரன், அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர்  ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கார்த்திகேயன், பாண்டியராஜன் ஆகியோர்  முன்னிலையில் வெள்ளிக்கிழமை, கரியாப்பட்டினம் பகுதி  மக்களுக்கு 500-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்

தனலட்சுமி வங்கி 93-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பசு மையை வலியுறுத்தி இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கும்  முகாம் வங்கியின் அதிராம்பட்டினம் கிளை வளாகத்தில் நடை பெற்றது. சிறப்பு விருந்தினர் அதிராம்பட்டினம் மருத்துவர் எச்.  அப்துல் ஹக்கீம் வங்கி வாடிக்கையாளர்கள் 93 பேருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.
 

;