திருச்சிராப்பள்ளி, ஜன.1- மக்களை பிளவுபடுத்தும் குடி யுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் தொழிலை சீரழிக்கும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோ தாவை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். ஆன்-லைன் வர்த்தகத்தை தடை செய்து சிறு, குறு வணிகர்களை பாது காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.8 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட் வெங்காய மண்டி மற்றும் அனைத்து சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆயத்த பேர வைக் கூட்டம் தாரநல்லூர் சிவாஸ் கல்யாண மண்டபத்தில் நடை பெற்றது. எல்பிஎப் வெங்காய மண்டி செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ராமர், எல்எல்எப் மாநிலச் செயலாளர் பிரபாகரன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றி னர். ஜன.8 பொது வேலைநிறுத்தத்தை யொட்டி திருச்சி காந்தி மார்க்கெட் வெங்காய மண்டி பகுதியில் ஜன.7 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜன.8 மாலை 6 மணி வரை லாரி புக்கிங் ஆபீஸ், வாழைக்காய் மண்டி, டிரான்ஸ்போர்ட் ஆபிஸ் மற்றும் இ.பி ரோடு பகுதி களில் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. விடுதலை சிறுத் தைகள், சிஐடியு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.