tamilnadu

img

ஜன.8 வேலைநிறுத்தம் மோட்டார் போக்குவரத்து தொழிலை அழிக்கும் பாஜக அரசை அம்பலப்படுத்த மக்கள் சந்திப்பு இயக்கம்

 ‘‘10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்துவீர்’’

சொந்த வாகனம், இருசக்கர வாகனம் வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் இதர பிரிவினர் அன்றைய தினம் சாலையில் வாகனங்களை இயக்கிக்கொண்டிருக்கின்ற  நிலையில் ஜனவரி 8  அன்று பிற்பகல் 12 மணி  முதல் பிற்பகல் 12.10 மணி வரை   தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் அடிப்படையில் 10 நிமிடங்கள் வாகனங்களை  ஆங்காங்கே நிறுத்தி ஆதரவு தர வேண்டும்.

திருச்சிராப்பள்ளி, டிச.29-  போக்குவரத்துக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு, சாலை போக்குவரத்துத் தொழிலாளர், வாகன உரிமையாளர், பராமரிப்பு தொழிலாளர், ஓட்டுநர் பயிற்சி பள்ளி கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மத்திய அரசின் மக்கள், தொழி லாளர் விரோத போக்கை கண்டித்து  ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத் தம் குறித்த ஆயத்த மாநாடு ஞாயி றன்று திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு எல்.பி.எப். அகில இந்திய பொருளாளர் நடராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநில பொதுச்  செயலாளர் கே.ஆறுமுக நயினார் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செய லாளர்  டி.எம். மூர்த்தி, எல்பிஎப் மாநில தலைவர் சண்முகம், எச்.எம். எஸ்.பொதுச் செயலாளர் சுப்பிர மணிய பிள்ளை, டி.டி.எஸ்.எப். திரு மலைசாமி, எம்.எல்.எப். மாநில தலை வர் அந்திரிதாஸ், ஐஎன்டியுசி பேரவை முதன்மை பொதுச் செய லாளர் நாராயணசாமி, ஏ.ஏ.எல்.எல்.எப். அர்ச்சுணன், தி.க.மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில், தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்குலைக்கும் வித மாக 44 சட்டங்களை 4 சட்ட தொகுப்பு களாக மாற்றிடவும், சட்டத் தொகுப்பில் தொழிலாளர்களின் நலன் களை பாதுகாக்கும் பிரிவுகள் நீக்கப் படுவதும், 8 மணி நேரம் பணி நேரம் என்பதை 9 மணி நேரமாக மாற்றி யமைப்பதும் போன்ற செயல்களில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வரு கிறது. நாட்டின் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களையும், அதன் பங்குகளையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் போக்கு தொடர்கிறது.  கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான வகையில் மோட்டார் வாகன சட்டம் கடுமையான எதிர்ப்பு களை மீறி திருத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால் தற்போதுள்ள போக்கு வரத்துத்துறை முற்றிலுமாக சீர்குலைக்கப்படும். அரசு போக்கு வரத்துக் கழகங்கள் முழுமையாக அழிக்கப்படும். சொந்தமாக வாகனம் வைத்து சுயமாக மோட்டார் தொழில் செய்து வருபவர்களையும், அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைக்கப்படும். மோட்டார் வாகனத் தொழிலாளர் மட்டுமின்றி சிறிய அளவில் சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், பரா மரிப்பு பட்டறைகள், ஒர்க்சாப்புகள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் என  அனைத்து தரப்பினரும் பாதிக்கப் படும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை எவ்வித கட்டுப்பாடுமின்றி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. பாஸ்ட் டேக் முறைக்கு மாற நிர்ப் பந்திக்கப்படுகிறார்கள். மாற வில்லையென்றால் சுங்க கட்டணம்  இரண்டு மடங்காக வசூலிக்கப் படும் என மத்திய அரசு அச்சுறுத்து கிறது. மத்திய பாஜக அரசின் மோட்டார் போக்குவரத்து தொழிலை அழிக்கும் இத்தகைய கொள்கைகளை கண்டித்தும், மோட்டார் வாகன சட்ட திருத்தத் தை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜனவரி 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத் தில் பங்கேற்பது என்றும்  மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனை வரும் இணைந்து தமிழ்நாட்டில் வேலை நிறுத்தத்தை வெற்றிகர மாக நடத்த வேண்டும்.   ஜனவரி 8 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்துவதற்கு மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   முன்னதாக போக்குவரத்து கூட்டமைப்பு பொருளாளர் தர்மன் வரவேற்றுப் பேசினார். சிஐடியு போக்குவரத்து சங்க நிர்வாகி பால சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

;