தஞ்சாவூர், ஜன.16- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத் தெருவில் அதிராம்பட்டினம் வர்த்தகர்கள், ரயில் உப யோகிப்பாளர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிராம்பட்டி னம் நல்வாழ்வு பேரவை நிறு வனத் தலைவர் மு.க.செ.அகமது அலி ஜாஃபர் தலைமை வகித்தார். கூட்டத்தில், காரைக்குடி- திருவாரூர் இடையே அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றும், இன்னும் விரைவு ரயில் சேவை தொடங்க வில்லை. இதனால், திருவா ரூர், பட்டுக்கோட்டை, அறந் தாங்கி உள்ளிட்ட ஆகிய பகுதி பொதுமக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொடர் கோரிக்கை வைத்தும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே இதுபற்றி ஏற்க னவே சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கை துரிதப்படுத்து வது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டது. அதிராம்பட்டினம் வர்த்தக சங்க நிர்வாகிகள் கே.கே. ஹாஜா நஜ்முதீன், என்.ஏ.முகமது யூசுப், மனித நல உரிமை கழகத் தலைவர் ஓ.கே.எம்.ஷிபஹத்துல்லா, எம்.நிஜாமுதீன், ஏ.சாகுல் ஹமீது, மு.காதர் முகைதீன், அகமது அன்சாரி, அகமது ஹாஜா, எம்.கே.எம்.அபூ பக்கர், எம்.ஆர்.ஜமால் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.