tamilnadu

img

நூற்றுக்கணக்கான ஏக்கர் அறுவடை நெற்பயிரில் நோய் தாக்குதல்

கடும் பாதிப்பில் விவசாயிகள் 

தஞ்சாவூர், ஜன.3- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பழைய நகரம் ஊராட்சி, அரசலங்கரம்பை பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெற்பழ நோய், குருத்துப்பூச்சி தாக்குதலால் பெரும் இழ ப்பை சந்தித்து வருகின்ற னர்.  இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் விவசா யிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். பருவமழை தேவையான அளவு பெய்த தும், ஏரி, குளங்கள் நிரம்பிய தும், ஆறுகள், பாசன வாய்க்கால்களில் தொடர்ந்து தண்ணீர் வந்ததாலும், ஏழாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு சாகுபடிப் பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வந்த னர். பயிரும் நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில், இப்பகுதியில் சிலரது வயல்களில் குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டது.  மேலும், நெற்பழ நோய் தாக்குதலும் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் பரவலாக காண ப்படுகிறது. இதனால் அறு வடை சமயத்தில் ஏற்பட்ட  திடீர் பாதிப்பு காரணமாக  விவசாயிகள் கடும் இழ ப்பைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து, விவசாயம் செய்து வரும் அணவயல் பகுதியைச் சேர்ந்த ஜெய ராமன் கூறுகையில், “ஏக்க ருக்கு விதை நெல், நடவு,  உரம், பூச்சி மருந்து, களை பறிப்பு, வேலையாள் கூலி என ரூ 25 ஆயிரத்துக்கும் மேல் செலவாகி உள்ளது. ஓரளவு விளைந்தால் ஏக்க ருக்கு 30 மூட்டை கிடை க்கும். தற்போது உள்ள நிலை யில் ஏக்கருக்கு தலா 24 மூட்டை நெல் தான் கிடை க்கும் நிலை உள்ளது.  அறுவடைக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே அறுவடைக்கு ஆள் கிடைத்தாலும் கால விரயம் ஆகிறது. செயின் வண்டி பயன்படுத்தினால் மணிக்கு ரூ 3 ஆயிரம், வாடகை. அப்படி ஏக்கருக்கு 2 மணி நேரத்துக்கு வெட்டு க்கூலி ரூ 7 ஆயிரம் ஆகிறது. தற்போது நெல் மூட்டை ஒன்று ரூ 850 முதல் 900 வரை விலை போகிறது. அப்படி பார்த்தால் ஏக்கருக்கு ரூ 21  ஆயிரம் கிடைக்கும். எப்படி பார்த்தாலும் ஏக்கருக்கு ரூ 4  ஆயிரம் நட்டம் ஏற்படுகிறது. கடைசியில் வைக்கோல் தான் மிச்சமாகும்” என்றார்.