திருச்சிராப்பள்ளி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாய சங்க முன்னாள் பொதுச்செயலாளரும், ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டி வளர்த்தவருமான தோழர் கே.வரதராசன் படத்திறப்பு நிகழ்ச்சி மற்றும் புகழஞ்சலி கூட்டம் வியாழனன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நந்தகுமார் தலைமை தாங்கினார். தோழர் கே.வரதராசன் படத்தை கி.இலக்குவன் திறந்து வைத்தார். இதில் சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சம்பத், வீரமுத்து ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் தர்மா ஆகியோர் புகழாரம் சூட்டினர். கூட்டத்தில் தோழர் கே.வரதராசனின் மகன் பாஸ்கர், மகள் கவிதா, தீக்கதிர்முன்னாள் பொது மேலாளர் கே.அனந்த ராஜன், சந்தானம், கட்சி உறுப்பினர்கள் மற்றும் தோழமை சங்கத்தினர் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.