tamilnadu

img

சிஐடியு தஞ்சை மாநாட்டு சுடர் ஏற்றம்

கும்பகோணம், ஜூலை 13- தஞ்சை மாவட்ட சிஐடியு 14-வது மாநாட்டையொட்டி கும்பகோணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மறைந்த சிஐடியு தலைவர்களில் ஒருவரான விஎன் என்று அழைக்கப்படும் வி.நடராஜன் நினைவு சுடரை தோழர் நடராஜனின் மனைவி வசந்தா எடுத்துக் கொடுக்க மாவட்ட பொருளாளர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.  மாநாட்டுக் கொடியை, போக்குவரத்து தொழிலாளர் சங்க பொறுப்பாளர் தாமோதரன் எடுத்துக் கொடுக்க சாலை போக்குவரத்து மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி பெற்றுக்கொண்டார். நிகழ்வில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சின்னை.பாண்டியன் தஞ்சை மாவட்ட ஆட்டோ சங்க கவுரவத் தலைவர் செந்தில்குமார் மாவட்ட துணை தலைவர் ஜீவபாரதி ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் அன்புமணி சில்வர் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் செல்வம் ஆர்பாபு உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் மாரிமுத்து வாலிபர் சங்க நகர தலைவர் ரஞ்சித் துணைத் தலைவர் சரண்ராஜ் மற்றும் மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் அறிவுராணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.