திருச்சிராப்பள்ளி, மே 31- திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொடர் பாக 80 நபர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 70 நபர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது திருச்சி மாவட்டத்தினைச் சார்ந்த 10 நபர், தேனி மாவட்டத்தை சார்ந்த 1 நபர் ஆக கூடு தல் 11 நபர் சிகிச்சைப் பெற்று வருகின்ற னர். அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர். சென்னை மற்றும் வெளி மாநி லங்களிலிருந்து திரும்பிய 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தற்போது மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 நபர்களும் சென்னையிலிருந்து திருச்சி மாவட்டத் திற்கு திரும்பியவர்கள். திருச்சி மாவட் டத்தில் வசித்து வரும் எவருக்கும் புதி தாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. தேவையில்லாமல் வெளியில் நடமாடு வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு - விலகி இரு- வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்து ழைப்பு கொடுக்க வேண்டும் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.