திண்டுக்கல், மே 23- திண்டுக்கல்லில் சாலை யோரங்க ளில் பூவிற்ற விவசாயிகளை காவல்துறை யினர் விரட்டியடித்தனர். மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா வணிக பூ வளா கத்திற்கு திண்டுக்கல் நரசிங்கபுரம், வெள் ளோடு, சிறுநாயக்கன்பட்டி, சின்னாள பட்டி, வக்கம்பட்டி, உள்ளிட்ட பல பகுதி களில் உள்ள பூ விவசாயிகள் தங்கள் பூக்களை விற்பனைக்கு சொண்டு வரு வார்கள். கடந்த இரண்டு மாதங்களாக கொரானோ தொற்று காரணமாக பூ மார்க்கெட் பூட்டிக்கிடக்கிறது. இதனால் தோட்டங்களில் பறிக்கப்பட்ட பூக்களை விவசாயிகள் பூ மார்க்கெட் அருகில் உள்ள சாலைகளில் போட்டு விற்பனை செய்தனர். அங்கு வந்த காவல்துறை யினர் பூ விவசாயிகளை விரட்டியடித்த னர். விவசாயிகள் தங்கள் பூக்களை தூக்கிக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இதற்கிடையே திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பூ விற்றுக்கொள் ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.