திண்டுக்கல்
மோடி அரசைக் கண்டித்தும் விவசாயிகள் விரோத சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் நான்காம் நாளாக முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தொடர்ந்து வியாழனன்று தலைமை தபால் நிலையத்தை இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர்ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழுஉறுப்பினர்கள் பி.கே.கருப்புசாமி, பி.செல்வராஜ், கே.அருள்செல்வன், சி.குணசேகரன், டி.முத்துச்சாமி, ஜி.ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.வனஜா, எம்.ஜானகி,சி.பாலச்சந்திரபோஸ், கே.ஆர்.பாலாஜி, நகர ஒன்றியச்செயலாளர்கள் பி. ஆஸாத், அஜாய் கோஷ், ராஜரத்தினம், மலைச்சாமி, கே.டி.கலைச்செல்வன், கே.எஸ்.சக்திவேல். வெள்ளைக்கண்ணன் உள்ளிட்ட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அலுவலகத்திற்குள் நுழைந்த போலீஸ்
முன்னதாக புதனன்று நாகல்நகர் சிண்டிகேட் வங்கி முன்பாக நடைபெற்றமுற்றுகை போராட்டத்தில் சட்டமன்றமுன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச்செயலாளர் ஆர். சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட் டத்தின் போது காவல்துறையினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற அரசுப் பள்ளிபாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பாலமுருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.புதனன்று முற்றுகைப் போராட்டத்தில்பங்கேற்ற பாலமுருகன் வியாழனன்றுநடைபெற்ற போராட்டத்தில் பங்கேற் றுள்ளாரா என காவல்துறையினர் தேடினர். இந்த நிலையில் பாலமுருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருவதை அறிந்த காவல்துறையினர் பாலமுருகனை சினிமா பாணியில்விரட்டி வந்துள்ளனர். கட்சியின் திண்டுக் கல் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்துவிட்ட அவரை கைது செய்யவேண்டுமென அலுவலகத்திற்குள் புகுந்து தேடியுள்ளனர். அலுவலகச் செயலாளர் அழகு, மூத்ததோழர் ஆர்.மணி உள்ளிட்டோர் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித் துள்ளனர். காவல்துறையின் அத்துமீறலை கைபேசி படமெடுக்கத் தொடங்கியவுடன் காவல்துறையினர் தப்பியோடி அருகிலிருந்த வீட்டின் காம்பவுண்டிற்குள் சென்று பதுங்கிக்கொண்டனர்.கட்சி அலுவலகத்திற்குள் காவல்துறையினர் நுழைந்த சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பழனி
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கள் வ.ராஜமாணிக்கம்,பி. வசந்தமணி. மாவட்டக்குழு உறுப்பினர்கள் குருசாமி, களஞ்சியம், எம்.ஆர்.முத்துச்சாமி. நகர்செயலாளர் கே. கந்தசாமி. பழனி ஒன்றியச்செயலாளர் கமலக்கண்ணன், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பேரா.சோ.மோகனா உட்பட ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.