tamilnadu

img

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திடுக.... தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேரவை வலியுறுத்தல்....

தருமபுரி:
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாநிலப் பேரவை வலியுறுத்தியுள்ளது. 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநித்துவப்பேரவை ஞாயிறன்று தருமபுரி ஜோதிமஹாலில் தோழர் டி.லட்சுமணன் அரங்கில் நடைபெற்றது. பொது அமர்வுக்கு மாநில தலைவர் மு.அன்பரசு தலைமை வகித்தார். வரவேற்புக்குழு செயலாளரும் சிஐடியு மாநில செயலாளருமான செ.நாகராசன் வரவேற்றார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர்  ஸ்ரீகுமார், மாநில துணைத்தலைவர்கள் கோ.பழனியம்மாள், மொ.ஞானதம்பி, ஆ.பெரியசாமி, இரா.மங்களபாண்டியன், என்.வெங்கடேசன், மு.சீனிவாசன், மாநில பொதுச்செய லாளர் ஆ.செல்வம், மாநிலபொருளாளர் மு.பாஸ்கரன், மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன்,மாநில துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள் சி.ஆர்.இராஜ்குமார், இரா.ந.நம்பிராஜன், சி.எஸ்.கிறிஸ்டோபர், உ.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து  செய்யவேண்டும். மின்சாரசட்டதிருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் மீதானபழிவாங்கும் நடவடிக்கைகளான 17-பி குற்றச் சாட்டுகள் தற்காலிக பணி நீக்க உத்தரவுகள், பணியிடமாறுதல், பதவிஉயர்வு மறுப்பு, பணி ஓய்வு மறுப்பு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஆதிசேஷய்யா தலைமையிலான பணியாளர் சீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை ரத்து செய்யவேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இப்பேரவையில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்  பொதுச்செயலாளர்   ஸ்ரீகுமார் பேசுகையில்,“மத்திய பாஜக அரசு கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் அளிக்கவில்லை. மக்களுக்கான எந்த திட்டமும் அமல்படுத்தவில்லை. மதவாதஅரசியலையும் கொள்கையையும் செயல்படுத்தி வருகிறது. இந்தியா கொரோனா தொற்றில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போதிய சுகாதார கட்டமைப்பு இல்லை. போதுமான மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் இல்லை. 

கொரோனா காலத்தில் இவற்றில் கவனம் செலுத்தாத மோடி அரசு, இதே காலத்தில் பாதுகாப்புத்துறை, எரிசக்தி துறை தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப்படுகிறது. தொழிலாளர்கள், ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு பெரும் முதலாளிகள் இலாபமடையும் வேலையை மத்திய அரசு செய்கிறது.மேலும் விவசாயத்தை அழிக்கின்ற வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இதை எதிர்த்த போராட்டங்கள் மேலும் தீவிரமடையும்” என்றார். மாநில தலைவர் மு.அன்பரசு பேசுகையில், கொரோனா காலத்தில் ஊழியர்களுக்கு அகவிலைபடி தொடங்கி சரண்டர் விடுப்பு வரை பறிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் தமிழக அரசு ஓய்வுபெறும் வயதை 58 லிருந்து வயதாக 59 ஆகஉயர்த்தியது.  இதில் தமிழக அரசுக்கு உள்நோக்கம் உள்ளது.ஒருமாத்தில் 3000 பேர் ஓய்வு பெறுகிறார்கள். ஓய்வுவயதை ஒருவருடம் தள்ளிப்போட்டால் அவர்களுக்கு வழங்கவேண்டிய பணபயண்களை நாம் எடுத்து கொள்ளலாம்  என தமிழக அரசு நினைக்கிறது.கடந்த 15 மாத கலமாக அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை கேட்டு அரசு ஊழியர்சங்கம் கொரோனா காலத்திலும் தொடர்ந்து  போராடி வருகிறது எனக் குறிப்பிட்டார்.

பிப்ரவரியில் அரசு ஊழியர் போராட்டம்
முன்னதாக இப்பேரவையையொட்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் வாக்குறுதியின் போது புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தப்படும் என  உறுதியளித்தார்.ஜெயலலிதா அவர்களின் ஆட்சி நடப்பதாக சொல்லும் எடப்பாடி அரசு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த மறுக்கிறது.கடந்த 2019,ம் ஆண்டின் போது ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிர மணியன் உள்ளிட்ட 7,பேர் மீது தற்காலிக பணிநீக்கம் 5068,பேர் மீது 17-பி குற்ற குறிப்பாணையை  ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசுத் துறைகளில் 4.5 இலட்சம் காலிபணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஆதி சேஷய்யா தலைமையிலான சீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை ரத்துசெய்து செய்யவேண்டும். பறிக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டர்விடுப்பு உள்ளிட்ட   கோரிக்கை களுக்காக அரசு ஊழியர்  சங்கம் தொடர்போராட்டம் நடத்தி வருகிறது  அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேசாவிட்டால் பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

;