சென்னை, ஜன. 13- இந்தியா - ஜப்பான் கடற்படையினர் கூட்டுப் பயிற்சி 5 நாட்கள் சென்னை கடற்பகுதியில் நடைபெறுகிறது. இதற்காக சென்னை துறை முகத்துக்கு வந்த ஜப்பான் போர்க்கப்பலுக்கு இந்திய கடலோர காவல்படை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கடலோர காவல்படை மற்றும் ஜப்பான் கடலோர காவல்படை இணைந்து ஒவ்வொரு ஆண்டும் கூட்டுப் பயிற்சி மேற் கொள்வதென்று 2006ஆம் ஆண்டு புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதுவரை 18 கூட்டுப் பயிற்சிகள் நடந்துள் ளன. கடந்த ஆண்டு இந்த கூட்டுப் பயிற்சி ஜப்பானில் நடைபெற்றதை தொடர்ந்து இந்த ஆண்டு சென்னையில் நடைபெறுகிறது.
இதற்காக ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘ஏசிக்கோ’ என்ற கப்பல் இன்று சென்னை துறைமுகத்தை வந்த டைந்தது. அப்போது இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கப்பலின் கேப்டன் கொய்சோ கர்டா தலைமையில் 60 பேர் கொண்ட குழு இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடு பட உள்ளது. 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டுப் பயிற்சியில் கட லோர பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு மற்றும் இருநாட்டு ராணுவங்களின் ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இருநாட்டு கப்பல்களும் இணைந்து 16ஆம் தேதி ‘சாயோக் கஜின்’ என்ற பெயரில் நடுக்கட லில் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டுப் பயிற்சிக்காக வருகை தந்த கேப்டன் கொய்சோ கர்டா கூறுகையில், ‘‘இந்திய கடலோர காவல் படை எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். கடலோர காவல் படையினர் மற்றும் குழந்தைகள் இணைந்து உற்சாக வரவேற்பளித்தனர். அது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 5 நாட்கள் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் கடல் கொள்ளையை தடுப்பது, கடல்சார் சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கியமானவைகள் குறித்து இருநாட்டு வீரர்களும் இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்" என்றார். இந்நிகழ்ச்சியில், ஜப்பான் துணை தூதர் கொஜ்ரோ உச்சி மாயா, கொஜ்ரோ மோடி, இந்தியா மற்றும் கடலோர காவல் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.