மதுரை, மார்ச் 29- நாட்டுப்புறக் கலைஞரும் திரைப்பட கலை ஞருமான பரவை முனியம்மா மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி யில், நாட்டுப்புற இசையை மக்கள் மத்தியில் பிர பலப்படுத்தியதில் பரவை முனியம்மாவிற்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்ற இவர், திரைப்படங்கள் மூலமாகவும் நாட்டுப்புற இசையை பிரபலப்படுத்தி னார். வெளிநாடுகள் உட்பட ஏராளமான நிகழ்ச்சி களில் பங்கேற்றுள்ள அவர், தம்முடைய தனித்துவ மான குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம்பெற்றி ருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.