சென்னையில் தனியார் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த பாண்டியன் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெனிபர் என்ற ஆசிரியர் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பள்ளியில் அவர் தங்கி இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத் பள்ளியின் ஊழியர்கள் கதவை தட்டியும் வெகு நேரகமாக கதவு திறக்கப்டாததால் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்களை கதவை உடைத்த போது ஆசிரியர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.