tamilnadu

img

தஞ்சாவூர் மாவட்டத்தில் 403 தீக்கதிர் சந்தா உ.வாசுகியிடம் வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 8-  தமிழகம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த ஜூலை 5, 6, 7 ஆகிய  தேதிகளில் மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகி மாவட்டம் முழுவதும்  சந்தா சேர்ப்பு இயக்கத்தில் ஈடு பட்டார். அவருடன் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கோ.நீலமேகம் (தீக்கதிர் மாவட்டப் பொறுப்பாளர்) மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஜூலை 7 வரை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், ஆண்டு சந்தா 209, அரையாண்டு சந்தா 194 என  மொத்தம் 403 சந்தாக்கள் சேக ரிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், கட்சியின் ஒன்றி யச் செயலாளர்களால், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது.  தஞ்சாவூர் மாநகரம் சார்பில்  18 ஆண்டு சந்தா, 33 அரையாண்டு  சந்தாவை மாநகரச் செயலாளர் வடிவேலன், தஞ்சாவூர் ஒன்றியம்  சார்பில் 9 ஆண்டு சந்தா, 4 அரை யாண்டுச் சந்தாவை ஒன்றியச் செய லாளர் கே.அபிமன்னன் வழங்கி னர். பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் 8 ஆண்டு சந்தா, 5 அரை யாண்டு சந்தாவை ஒன்றியச் செய லாளர் சி.பாஸ்கர், பூதலூர் வடக்கு  ஒன்றியம் சார்பில் 11 அரை யாண்டுக்கான தீக்கதிர் சந்தா வை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்,  அம்மாபேட்டை ஒன்றியம் சார்பில் 9 ஆண்டு சந்தா, 7 அரையாண்டு சந்தாவை ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், திருவையாறு ஒன்றியம் சார்பில், 17 ஆண்டு சந்தா, 7 அரையாண்டு சந்தாவை ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் வழங்கினர்.  இதேபோல் மின்னரங்கம் சார்பில் 13 ஆண்டு சந்தா, ஒரு அரை யாண்டு சந்தாவை மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், போக்குவரத்து அரங்கம் சார்பில்  16 அரையாண்டு சந்தா, சிஐடியு சார்பில் 7 அரையாண்டு சந்தா, 16  ஆண்டு சந்தாவை சிஐடியு மாநி லச் செயலாளர் சி.ஜெயபால், ஆசி ரியர் அரங்கம் சார்பில் 11 ஆண்டு  சந்தாவை பேராசிரியர் என்.வி.சுகு மார் ஆகியோரும் வழங்கினர்.

;