tamilnadu

img

கிரீஸ் வீரர் சாம்பியன்

ஏடிபி பைனல்ஸ் 

ஏடிபி பைனல்ஸ் என்ற பெயரில் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது.  டென்னிஸ் உலகின் முன் னணி தொடராகக் கருதப் படும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் உள்ள டாப் 8 வீரர்கள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்பார் கள். தொடக்கம் முதலே பரபரப் பாக நடைபெற்ற இந்த தொட ரில் முன்னணி வீரர்களான பெட ரர் (சுவிஸ்), நடால் (ஸ்பெயின்), ஜோகோவிச் (செர்பியா), மெத்வதேவ் (ரஷ்யா)  ஆகியோர் சொதப்ப ஸிட்ஸிபாஸ் (கிரீஸ்) - டொமினிக் தியம் (ஆஸ்திரியா) ஆகியோர் இறுதிக்கு முன்னேறினார்கள். 

ஞாயிறன்று (இந்திய நேரப்படி திங்கள் அதிகாலை) நடை பெற்ற இறுதி ஆட்டத்தில் ஸிட்ஸிபாஸ் 6-7 (6-8), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். முன்னணி வீரர்களைத் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பந்தாடி பட்டம் வென்ற ஸிட்ஸி பாஸுக்கு 21 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.