டென்னிஸ் உலகில் அதிக பரிசுத்தொகை கொண்ட கிராண்ட்ஸ்லாம் தொடரான விம் பிள்டன் தொடர் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. பொதுவாக இருபாலர் ஒற்றையர், இருபாலர் இரட்டை யர், கலப்பு இரட்டையர் எனப் பல தொடர்கள் நடைபெற்றா லும், டென்னிஸ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டிகளை மட்டுமே. இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி யாட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர். இந்த ஆட்டம் ஞாயி றன்று மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது. பரிசுத்தொகை சாம்பியன்- 20 கோடி ரூபாய் (கோப்பையுடன்) தோற்பவருக்கு 9 கோடி ரூபாய் (கோப்பையுடன்)