ஜம்முவின் நக்ரோட்டா பகுதியில் பயங்கரவாதிகள் பயணித்த வாகனத்தின் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சண்டையில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.
ஜம்மு நகரின் புறநகரில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் மற்றும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. நக்ரோட்டாவின் பான் டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் பயணித்த ஒரு வாகனம் பாதுகாப்புப் படையினரால் தடுத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 4 பயங்கரவாதிகள் சுடப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.