tamilnadu

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து குறைந்தது

மேட்டூர், ஜன.12- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  குறைந்து வருகிறது. ஞாயி றன்று நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1,006 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 112.61 அடியாக குறைந்துள்ளது. அணையில் தற்போது 82.17 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

;