சேலம்,ஜன.12- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்தவர் நிவேதிதா. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தாவர வியல் முதுநிலை இரண்டா மாண்டு படித்து வந்தார். இந்நிலை யில் விடுதி அறையில் ஞாயிறன்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் மாணவியின் தற்கொலை தொடர் பாக விசாரணை மேற்கொண்டனர். பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவரிடம் சில்மிஷம் செய்த தாக சமீபத்தில் சமூகவலைத்தளங் களில் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தும் துணைவேந்தர் நடவடிக்கை எடுக்காமல், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.