திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி பலி

இளம்பிள்ளை, ஜன. 14- சேலம் மாவட்டம் அரியனூர் அருகே சீரகாபாடி மேம் பாலம் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சித்து ராஜ் (55). இவரது மனைவி ராணி (50). இந்த தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் சீரகாபாடி அருகே மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த பார்சல் வேன் மோதியதில் அவர்களது இருசக்கர வாகம் 50 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ராணியின் தலையில் வேன் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து அருகிலிருந்த வர்கள் கணவர் சித்துராஜ் மீட்டு தனியார் மருத்துவமனை யில் அனுமதித்தனர். இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;