tamilnadu

img

மாதர் சங்கம் சார்பில்  சமத்துவ பொங்கல் விழா

 சேலம், ஜன.11- சேலத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சேலம் விபிசி நினைவகம் முன்பு நடை பெற்றது. இதில் கோலப் போட்டியில் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை கண்டித்து கோலங்கள் வரையப்பட்டது. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட பொருளாளர் என். ஜெயலட்சுமி, நிர்வாகிகள் கே. ராஜாத்தி , ஆர். வைரமணி மற்றும் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ். கே. தியாகராஜன், மாநில குழு உறுப்பினர் எ.கோவிந்தன், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்று பரிசுகளை வழங்கி பாராட்டினர்.