மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் மறியலில் பங்கேற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர். இதன்பின் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில், சங்க நிர்வாகிகள் தங்களது கைகளில் மெஹந்தி வரைந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.