tamilnadu

img

குடியுரிமை சட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிரானது தொல்.திருமாவளவன் எம்.பி பேட்டி

சேலம், டிச. 25- குடியுரிமை சட்டமானது இஸ் லாமிய மக்களுக்கு மட்டும் எதிரா னது அல்ல, மாறாக ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிரான நடவடிக்கை யாகும் என தொல்.திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், கீழ்வெண் மணியில் கூலி உயர்வு கேட்ட விவசாய தொழிலாளர்கள் 44 பேர் பண்ணையாளர்களால் எரித்து கொல்லப்பட்டதன் 51 ஆம் ஆண்டு நினைவு தினம் புதனன்று அனு சரிக்கப்பட்டது. இதனையொட்டி சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் எம்.பி., செய்தியாளர்களி டம் கூறியதாவது, மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி மக்களிடம் பதட் டத்தை ஏற்படுத்தி உள்ளது. இது  இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிரான நடவடிக்கை யாகும். அரசியல் அமைப்புச் சட் டத்தில் மதம், சாதி, இனம் பாகுபாடு இன்றி நடத்த வேண்டும் என வலி யுறுத்துகிறது. ஆனால் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த் துப் போகச் செய்யும் வகையில், மதத்தின் பெயரால், உள்நோக் கத்துடன் குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.  இது சமூக கட்டமைப்பை பாதிக்கும். எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண் டும். இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸும் குடி யுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்தியாவில் இந்து ராஷ்டிரம் என பெயரை மாற்ற முயற்சி எடுத்து வருகின்றனர்.  இந்த சட்டத்தை ஜனநாயக சக்தி கள் எதிர்த்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத் திற்கு எதிராக வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்க ளுக்கும், இந்துக்களுக்கும் இடையே வன்முறையை தூண்டும்  வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என அவர் குற்றம்சாட் டினார். மேலும், பாரதிய ஜனதாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக உள்ள அதிமுக அரசுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார் கள். ஏற்கனவே, ஜார்க்கண்ட் சட் டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டி உள்ளனர். அங்கு ஆட்சியில் இருந்த பாஜக மிகப்பெரிய தோல் வியை சந்தித்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக் களிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  மேலும், சென்னையில் நடை பெற்ற திமுக தலைமையிலான குடி யுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு பேர ணியில் பல லட்சம் பேர் பங்கேற்ற னர். இது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பு எந்தள விற்கு உள்ளது என்பதை பிரதி பலித்துள்ளது. ஆனால், சென்னை பேரணியில் பங்கேற்ற 8 ஆயிரம் பேர் மீது அதிமுக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களை அச்சு றுத்தவே இதுபோன்ற பொய்  வழக்குகளை போட்டு வருகின்ற னர். இதனை விடுதலை சிறுத்தை கள் கட்சி வன்மையாக கண்டிக்கி றது. மேலும், எழுத்தாளர்கள், கலை ஞர்கள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட் டத்திலும் விசிக பங்கேற்கும். இதே போல், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறும் வரை இந்தியா முழுவதும் இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.  மேலும், தந்தை பெரியார் குறித்து பாஜக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்திற்கு கண்ட னம் தெரிவித்த அவர், புதுச்சேரி யில் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இஸ்லாமிய மாணவி ஒருவரை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம் மாணவி தனக்கு வழங்கப்பட வேண்டிய தங்கப்பதக்கம் தேவை யில்லை என தெரிவித்து இருப் பது பாராட்டுக்குரியது. இதேபோல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவரை இந்திய அரசு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பியதற்கும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர் கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும். அந்த அடிப்படை யில் ஈழத் தமிழர்களுக்கு குடியு ரிமை வழங்க வேண்டும் என தெரி வித்தார். இதேபோல், ஈரோடு பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க அருந்ததியர் சிறுமி ஒருவர் வன்புணர்ச் சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இச்சம்பவத்தில் தொடர் புடையவர்கள் போக்சோ சட்டத் தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத் தினர்.   முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பின்போது விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் இமய வரம்பன், மண்டல செயலாளர் நாவ ரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

;