tamilnadu

img

தொழிலாளி-விவசாயி ஒற்றுமையே சோசலிச பாதைக்கு வழி சென்னை கருத்தரங்கில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேச்சு

சென்னை, டிச. 29- சிஐடியு 16ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் ஜனவரி 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. அதையொட்டி சென்னையில் சிறப்பு கருத்தரங்கம் ஞயிறன்று (டிச. 29)  நடைபெற்றது. வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை தலைமை தாங்கினார். கருத்தரங்கில், “சோசலிசமே மாற்று” என்ற தலைப்பில் டி.கே.ரங்க ராஜன் எம்.பி. பேசுகையில், ஏஐடியுசி உருவாகி 100 ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திர போராட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஏஐடியுசி ஆற்றிய பங்கு ஏராளம்” என்றார். “சிஐடியு உருவாகி 50 ஆண்டுகள் ஆகின்றன இந்நிலையில் சிஐடியுவின் 16ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை பாது காப்பதில், சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் சிஐடியு முன்னேறி யிருக்கிறது. ஆனாலும் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது” என்றும் அவர் கூறினார்.
நவீன சுரண்டலுக்கு எதிராக...
“ஏராளமான தொழில்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 4ஆவது கட்ட தொழில் புரட்சியும் ஏற்பட்டு விட்டது. ஆனால் தொழிலாளி வர்க்கம், குறிப்பாக, ஐடி  தொழிலாளர்கள் கூடுதலாக சுரண்டப் படுகிறார்கள். பஞ்சாலைத் தொழி லாளர்களை விட 25 விழுக்காடு கூடுத லாக மொபைல் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சுரண்டப்படுகிறார்கள். தற்போது தொழிலாளி எப்படி சுரண்டப்படுகிறான் என்ற ஆய்வு மேற்கொண்டு, சுரண்டப்படுகிறோம் என்ற உண்மையை, உணர்வை தொழி லாளர்களிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்” என்றும் அவர் கூறினார். சுரண்டலுக்கு ஆதரவாக அரசும், நீதிமன்றங்களும் எப்படி செயல்படு கின்றன என்பதை தொழிலாளர் களுக்கு புரியவைக்க வேண்டும். முத லாளிகளை எதிர்த்து போராடினால் போதாது, முதலாளித்துவ அரசியலுக்கு எதிராகவும் போராட வேண்டும். பொதுக் கூட்டம் நடத்த, பேரணி நடத்த அனு மதி மறுக்கப்படுகிறது. இதுவே சுரண்ட லுக்கு ஆதரவான ஒரு பகுதியாக பார்க்க வேண்டும். உலக தொழிலாளர் அமைப்பு ஐடி தொழிலாளர்கள் குறித்து நடத்திய ஆய்வில், அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதும், மன  அழுத்தத்திற்கு ஆளாவதும் தெரிய வந்துள்ளது என்றும் டி.கே.ரங்கராஜன் கூறினார். பிற மாநிலங்களிலிருந்து தமிழ கத்திற்கு வந்து பணிபுரிபவர்களின் உழைப்பு 14 மணி நேரம், 16 மணி நேரம்  என சுரண்டப்படுகிறது. பிற மொழி களை, கலாச்சாரத்தை கற்றுக் கொண்டு  அவர்களையும் திரட்ட வேண்டும். நவீன சுரண்டலை புரிந்து கொண்டு தொழி லாளர்களை திரட்ட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாட்டை துண்டாடும் மதவெறிக்கூட்டம்
இந்தியாவில் மதவாத அரசியல்  தலை தூக்கியுள்ளது. பசு, ராமரைப் பற்றி கவலைப்படும் பாஜக அரசு  மக்களைப் பற்றி கவலைப்படுவ தில்லை. பாஜக அரசு சட்டவிரோதமாக அனைத்து சட்டங்களையும் திருத்திக் கொண்டிருக்கிறது. மேலும் மதரீதி யாக மக்களை பிரித்துக்கொண்டிருக் கிறது. 200 ஆண்டுகளில் இல்லாத  அளவிற்கு நாடு இன்று துண்டாடப்படு கிறது, மத மோதல்கள் உருவாகி யுள்ளன. தீண்டாமை பல வடிவங் களில் வருகின்றன.  புதிய நவீன மனிதனை உருவாக்கு வதுதான் சோசலிசம் விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள், ஆலைத் தொழி லாளர்கள், முறைசாரா, அமைப்பு சாரா, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என அனைத்துதரப்பு தொழிலாளர் களையும் சாதி, மதம் கடந்து தொழி லாளி என்ற அடிப்படையில் ஒரே நேர் கோட்டில் திரட்ட வேண்டும். அந்த வகை யில் வரும் 8ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அனைத்து பகுதி தொழிலாளர்களையும் திரட்ட வேண்டும். தொழிலாளி விவசாயி ஒற்றுமை உருவானால்தான் சோசலிசப் பாதையை அடைய முடியும் என்றும் டி.கே. ரங்கராஜன் அழைப்பு விடுத்தார்.
‘சவால்களை முறியடிப்போம்’
“நவீன தாராளமயத்தில் தொழிற் சங்கங்களும் - தொழிலாளர்களும்” என்ற தலைப்பில் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் பேசுகையில், “வர்கப் போராட்ட வரலாற்றில் பல சவால் களை சந்தித்து முன்னேறி வந்திருக் கிறது தொழிற்சங்கம். நவீன தாராள மயக் கொள்கை வந்த பிறகு புதிய  சவால்கள் முன்னுக்கு வந்துள்ளன. தொழிலாளர்களை சுரண்டி முத லாளிகள் லாபமீட்டுவது அதிகரித்துள் ளது. முதலாளிகளுக்கு ஆதரவாக ஆட்சியாளர்களும், அரசும் உள்ளனர்” என்று குற்றம் சாட்டினார். “அனைத்து பொது சொத்துக்களை யும் தனியாருக்கு தாரை வார்ப்பது, அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தி முதலாளிகளுக்கு ஆதரவாக செய்லபடுவது, முதலாளிகள் அதிக லாபம் ஈட்டும் வகையில் வரியை குறைப்பது, நிரந்தர தொழிலாளர்களை உதிரி தொழிலாளர்களாக மாற்றுவது ஆகியவை அரசின் கொள்கை களாக உள்ளன. 48 கோடி பேர்  தொழிலாளர்களாக உள்ள நிலையில் 41 கோடி பேர் முறைசாரா, அமைப்பு சாரா, ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். பாஜக அரசு சமூக பாது காப்பு திட்டங்களை படிப்படியாக குறைத்துக் கொண்டிருக்கிறது. வேலை பாதுகாப்பு இல்லாத சூழல்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆலைத் தொழிலாளர்களை பிரித்து வைக்கும் ஏற்பாடு என்பதை  மறந்து விடக் கூடாது. உலக தொழி லாளர் அமைப்பு அறிவுறுத்தியுள்ள சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை இந்தியாவில் மறுக்கப்படுகிறது.  பாஜக அரசும் மத ரீதியாக, சாதிய ரீதியாக தொழிலாளர்களை பிரிக்கப் பார்க்கிறது. எனவே சாதி,  மத பேதங்களை கடந்து தொழி லாளர் என்ற அடிப்படையில் ஒன்று  திரண்டால்தான் எதிர்வரும் சவால் களை முறியடிக்க முடியும்” என்றார்.
10வது இடத்தில் இந்தியா
பணியிடத்தில் - குடும்பத்தில் “பெண் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்” என்ற தலைப்பில் பேரா சியர் கல்பனா கருணாகரன் பேசுகை யில், “இந்தியாவில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்றால் பெண்களின் பங்களிப்பு முக்கியம். வேலைவாய்ப்புகளில் பெண் தொழி லாளர்களின் விழுக்காடு குறைந்து வருகிறது. நாட்டில் உள்ள மொத்த பெண்களில் 15 வயதிற்கு மேற்பட்டு ஊதிய வேலையில் 2005ஆம் ஆண்டு 36 விழுக்காடு பேர் இருந்தனர். இதுவே பிற நாடுகளை விட குறைவு. 2018ஆம் ஆண்டில் அது 26 விழுக்காடாக குறைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் இந்தியா கீழிருந்து 10ஆவது இடத்தில் உள்ளது” என்றார். நகர்ப்புறங்களில் இருந்து வீடு களை அப்புறப்படுத்தி, புதிய இடத்தில் அமர்த்தும் போது, அங்கு பெண் களுக்கான வேலை வாய்ப்பு இல்லாத தால் அவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. அப்படி குடியமர்த்தும் இடங்களில் அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இன்று முன்வைத்து போராட வேண்டியுள்ளது என்றும் கூறினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப.பாலகிருஷ்ணன் வரவேற் றார். மாநில உதவிப் பொதுச் செயலா ளர் வி.குமார் நன்றி கூறினார். காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் இ.முத்து குமார், மாநிலச் செயலாளர்கள் எஸ்.கே.மகேந்திரன், கே.சி.கோபிக்குமார் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

;