ஒடிசலான கருத்த உருவம்.கூர்மையானமூக்கு.வெள்ளை வேட்டி ஜிப்பா. தோளில் சிவப்புத்துண்டு.இதுதான் பாவலர்.1967ஆம் ஆண்டு தி.மு.க.கம்யூனிஸ்ட் கூட்டணி பெற்ற வெற்றியில் பாவலரின் குரல் முக்கியபங்கு வகித்தது.
பாவலர் வரதராஜன் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளில் உழைக்கும் வர்க்கத்தைச் சுண்டியிழுக்கும் பாடல்களைப் பாடி இறவாப் புகழ் பெற்றார். அக்காலத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரகராக கலை வடிவில் உலா வந்தார் வரதராஜன். இந்தியாவில் முதன்முதலாக தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் அரசு கேரளாவில் அமைந்ததுஅனைவரும் அறிந்ததே. 50ஆயிரத்துக்கும் மேல் மக்கள் கூடிய அத்தேர்தல் வெற்றிவிழா கூட்டத்துக்கு, முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை அமைத்து கேரள முதல்வரான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் வந்திருந்தார். இவ்வெற்றி விழாவில் மக்கள் கலைஞர் பாவலர் வரதராஜன் பாராட்டு மழையில் நனைந்தார்.இதுதான் ஒரு கலைஞனுக்கு ஒரு உண்மையான தலைவன், உண்மையான இயக்கம் தரும் மரியாதை. பாவலர் வரதராஜனின் எளியோர்க்கான கலைச்சேவை வலிமையானது. அப்பழுக்கற்றது. உணர்வுப்பூர்வமானது. அர்ப்பணிப்பு மிக்கது. எனவேதான் என்றென்றும் எளியோர் மனங்களில் பாவலர் வரதராஜன் நீடூழி வாழ்கிறார்.
==பெரணமல்லூர் சேகரன்==