வார இறுதி நாட்கள்: சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை
சென்னை, மே 18- வார இறுதி நாட்களில் சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் தினசரி 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
மெட்ரோ ரயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறி வித்துள்ளது. 100 ரூபாய் செலுத்தி சுற்றுலா அட்டை பெற்று மெட்ரோவில் அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம். 150 ரூபாய் செலுத்தி சுற்றுலா அட்டையை பெற்றுகொள்ள வேண்டும். பின்னர் அந்த அட்டையை திருப்பி செலுத்தியவுடன் ரூ.50 வைப்பு தொகை திருப்பித் தரப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
சென்னை, மே 18- தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ஆம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வரும் 19, 20, 21 ஆகிய நாட்க ளில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை முகமை அறிவுறுத்தியுள்ளது.
மிக மெல்லிய பேட்டரியுடன் புதிய ஸ்மார்ட்போன்
சென்னை, மே 18- உயர் செயல்திறன்மிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும், ஐக்யூஓஓ நிறு வனம், தனது இசட் மாடல் வரிசையில் புதிய இசட்9எக்ஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இது பயனர்களுக்கு ஏற்ற வகையில் சிறப்பான செயல்திறன், நவீன வடி வமைப்பு மற்றும் புதுமை தொழில்நுட்பம் ஆகிய வற்றைக் கொண்டுள்ளது. இது அமேசான்.இன் மற்றும் ஐக்யூஓஓ இ-ஸ்டோரில் வரும் 21ந்தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வரு கிறது.
இந்த பிரிவில் மிக மெல்லிய ஸ்மார்ட்போனாக (7.99மிமீ) வெளிவந்துள்ள இசட்9எக்ஸ் ஸ்மார்ட் போனில் ஒரு பெரிய 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப் பட்டுள்ளது. சலுகை விலையாக ரூ.11,999க்கு கிடைக்கிறது.