வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

பெயிண்ட் ஒப்பந்தக்காரர்களுக்கு பயிற்சி

சென்னை:
வண்ணப்பூச்சு (பெயிண்ட்)  சேவைகளை பாதுகாப்பாக நுகர்வோருக்கு வழங்க  தங்களைத் தயார்படுத்திக் கொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களிலுள்ள 2000 க்கும் அதிகமான ஒப்பந்தக்காரர்களுக்கு  பாதுகாப்பு மற்றும் துப்புரவு பயிற்சியை ஜெஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் நிறுவனம்  அளித்துள்ளது.ஆரோக்கியம் மற்றும் துப்புரவு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கும்  இந்த சூழலில், கோவிட்-19 ஐ எதிர்க்க தயாராக நட்சத்திர ஒப்பந்த கூட்டாளிகள் திட்டத்தின் கீழ்  இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.  பொதுமுடக்கத்திற்கு பின்  வீடுகளுக்கு வண்ணப்பூச்சு அடிக்கசெல்லும்போது  மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்த பயிற்சியின்போது  கற்றுத்தரப்பட்டதாக நிறுவனத்தின்  இணை மேலாண்மை இயக்குநர் ஏ.எஸ். சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

;