tamilnadu

படிக்கட்டு பயணத்தை தடுக்க 900 அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள்

சென்னை, மே 13- பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் 900க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தானியங்கி கதவுகள் நிறு வியுள்ளது.

இது தவிர கூடுதலாக, பேருந்துகளின் நுழைவு மற்றும் வெளியேறும் படிக்கட் டுகளுக்கு அருகே உள்ள ஜன்னல்கள் கண்ணாடி பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் தொங்கியபடி செல்வதை தடுக்க முடியும். கடந்த பிப்ரவரி யில் தொடங்கப்பட்ட டீலக்ஸ் மற்றும் சாதா ரண சர்வீஸ் பேருந்துகளின் மறுசீரமைப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன.

அதில் பேருந்துகளில் தானியங்கி கதவு கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், பழைய  மற்றும் பழுதடைந்த எக்ஸ்பிரஸ் பேருந்து களுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப் படவில்லை. தேய்ந்து போன பேருந்து களின் ஒரு பகுதி விரைவில் புதிதாக மாற்ற ப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கதவுகள் பொருத்தப்பட் டதால் படிக்கட்டுகளுக்கு இடம் சிறிது சுருங்கி யுள்ளது. எனவே பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் அதிக நேரம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து தற்போது 3,100 பேருந்துகள் உள்ளன. அவை 629 வழித்தடங்களில் இயக்கப்படு கின்றன. இது தினசரி சுமார் 29.5 லட்சம் பயணி களுக்கு சேவை செய்கிறது. சராசரியாக, ஒவ்வொரு பேருந்தும் தினசரி 265 முதல் 270 கி.மீ. தூரம் வரை பயணிக்கிறது,

இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்கள் கூறிய தாவது, புதிதாக கதவுகள் பொருத்தப்பட் டுள்ளது எங்களுக்கு பெரும் நிம்மதியை அளி த்துள்ளது.பொதுவாக, பொருட்கள் அல்லது பைகள் இல்லாமல் இருவர் ஒவ்வொரு கதவு  வழியாகவும் ஒரே நேரத்தில் நுழைந்து வெளி யேற முடியும்.

ஆனால் இப்போது ஒருவர் மட்டும் அதைப் பயன்படுத்த முடியும். படிக்கட்டில் யாராவது நின்றால் பேருந்துகளை இயக்கக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள் ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

;