tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணி தேர்வு அறிவிப்பு
சென்னை, மே 18- டி.என்.பி.எஸ்.சி.  அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்பு வதற்கான அறி விப்புகளை வெளி யிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, தொழில் நுட்பப் பணியில் 118 காலிப் பணியிடங் களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்லூரி உடற்கல்வி மற்றும் விளை யாட்டு இயக்குநநர், மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், உதவி பொது மேலாளர், தமிழ் நிருபர், ஆங்கில  நிருபர், கணக்கு அலுவலர், உதவி இயக்குநர், முதுநிலை அலுவலர், வேளாண் உதவி அலுவலர், நிதியாளர்  என 20 வகையில் கீழ் 118 காலிப்பணி யிடங்களை நிரப்ப உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க ஜூன் 14ஆம் தேதி கடைசி நாளா கும். டிகிரி மற்றும் பொறியியல் படித்த வர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப் பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் பணி  வாரியாக கல்வித் தகுதி, வயது வரம்பு,  சம்பளம் உடைய விபரங்களை தெரிந்து  கொள்ள https://www.tnpsc.gov.in/  என்ற இணையதள பக்கத்தை காண வும்.

குடிநீர் வாரியத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டி ரத்து
சென்னை, மே 18- சென்னை குடி நீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரி யத்துக்கு விதிக் கப்பட்ட ரூ. 96.10  கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு ரூபாய் 96.10 கோடி ஜிஎஸ்டி விதித்து மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை எதிர்த்து குடிநீர் வழங்கல் வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு
தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை, மே 18- மாற்றுத் திறனாளிகளுக்கான 5 சத விகித இடஒதுக்கீடு, வயது வரம்பில் தளர்வு உள்ளிட்ட விதிமுறைகளை தனி யார் உயர்கல்வி நிறுவனங்களும் செயல்  படுத்துமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அரசு மற்றும் தனி யார் நிகர்நிலை பல்கலைக்கழகங்க ளுக்கு தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்  துறை செயலர் எஸ். நாகராஜன் அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் மாற்  றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அத்து டன், அதிகபட்ச வயது வரம்பிலும் அவர்  களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப் பட வேண்டும். தவிர, அவர்கள் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளை சிரமமின்றி மேற்கொள்ள தேவையான அடிப்படை வசதிகள், தங்கும் இடவசதியும் செய்து தரப்பட வேண்டும்.

அதேபோல, தனியார் உயர்கல்வி நிறு வனங்களும் மாற்றுத் திறனாளிகள் நல னைகருத்தில் கொண்டு, அவர்களுக் கான 5 சதவிகித இடஒதுக்கீடு, வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு, தேவை யான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை  அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

இவ்வாறு நாகராஜன் கூறியுள்ளார்.

மின்வசதியை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சர்!
திருவாரூர், மே 18- கொரடாச்சேரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யைச் சேர்ந்த மாணவி  துர்காதேவி. இவர், மின்சார வசதி இல் லாத குடிசை வீட்டில் வசித்த நிலையிலும், 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் திரு வாரூர் மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பெற்றார். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலின் உத்தரவு பேரில், பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, மாணவி துர்காதேவியின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவரது வீட்டிற்கு 5 நாட்களில் இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

;