tamilnadu

img

மின் ஊழியர் போராட்டத்திற்கு பணிந்தது தமிழக அரசு.... தனியார் மூலம் ஊழியர்களை நியமிக்கும் அரசாணை ரத்து.... : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு....

சென்னை:
மின் ஊழியர்களின் ஒன்றுபட்ட ஆவேச போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு பணிந்தது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள வயர்மேன், ஹெல்ப்பர் ஆகிய பணியிடங்களை தனியார் நிறுவனம் மூலம் நியமனம் செய்வதற்கான அரசாணை திரும்பப்பெறப்படுவதாகவும் ஐந்து துணை மின் நிலையங்களை தனியார்மயமாக்கும் உத்தரவைத் திரும்பப்பெறுவதாகவும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாகி பொதுத்துறை நிறுவனமாக 64 ஆண்டுகளுக்கு மேல் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. 2,95,98,000 கோடிக்கு மேல் மின் இணைப்புகளைக் கொண்டு பராமரிக்கும் நிறுவனமாக இருந்து வருகிறது. 1,42,000 பணியாளர்கள் இருக்க வேண்டிய மின்வாரியத்தில் 82,000க்கும் குறைவான ஊழியர்களே உள்ளனர். எனினும் கடும்வேலைப்பளுவுடன் மக்கள் சேவையைச் சிறப்பாக செய்து பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதா 2020 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட மத்திய அரசு துடிக்கும் அதேவேளையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கொள்கை அளவில் எதிர்ப்பதாக கூறிவரும் தமிழக அரசு கொல்லைப்புற வழியாக இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்களை மறைமுகமாக அமல்படுத்தி வருகிறது.

துணை மின்நிலையம்
இதற்கு எதிராக தமிழ்நாடு மின்சாரவாரிய ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக கடும்கண்டனம் தெரிவித்து கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்தியஅமைப்பு(சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், மின்வாரியத்திற்கு சொந்தமான ஐந்து துணை மின்நிலையங்களை தனியாருக்கு இரண்டாண்டுகளுக்கு பராமரிப்பதற்கு தமிழக அரசும் மின்வாரியமும் கொடுத்துள்ளன. மின்துறை அமைச்சரை தொழிற்சங்கங்கள் சந்தித்து பேசியபொழுது துணை மின் நிலையங்களை தனியாருக்கு கொடுக்கமாட்டோம் என்று கூறினார். தொழிற்சங்கங்களிடம் உறுதி கொடுத்த அமைச்சர் மறுபுறம் துணைமின் நிலையத்தை திறந்து வைக்க தனது கட்சி சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்கிறார் என்று விமர்சித்தார்.

மேலும், “பத்திரிகையாளர் சந்திப்பில்கேங்மேன் பதவி நிரப்பிடும் பொழுது இந்த அவுட்சோர்சிங் உத்தரவுகள் ரத்துசெய்யப்படும் என உண்மைக்குப் புறம்பான தகவலை மக்கள் மன்றத்தில் சொல்லுகிறார். இந்த துணை மின் நிலையத்தில் உள்ள பதவிகள் பெரும்பாலும் பொறியாளர்கள் தொடர்பு உடையவை. நூறு கோடிக்கு மேல் பெறுமானமுள்ள துணை மின் நிலையத்தை வெறும் ரூ.4.10லட்சத்தை டெபாசிட்டாக பெற்றுக்கொண்டு பராமரிக்க விடுவது கடுமையான ஆபத்தை விளைவிக்கும். தளவாடப் பொருட்களுக்கு எந்தவித உத்தரவாதமும் தனியார் நிறுவனங்களால் கொடுக்க முடியாது” என்று எஸ்.ராஜேந்திரன் கூறினார். 

சிறுபுனல் உற்பத்தி நிலையங்கள் தனியாருக்கா?
மேலும் அவர் கூறியதாவது:3 மெகாவாட்டுக்கு கீழ் உள்ள சிறுபுனல் மின் உற்பத்தி நிலையங்களை பராமரிக்கவும் தனியாருக்கு விடுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகளை கோர அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக மின் வாரியத்திற்கு சொந்தமான உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்து தனியாரிடத்தில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி வருகிறது. இனி அநேகமாக மின்வாரிய உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் படிப்படியாக தனியாரிடம் பராமரிக்கக் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலைக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்கள்.

பிரிவு அலுவலகங்களின் பணிகளும் தனியாருக்கு...
தற்போது வாரியம் வட்ட அளவில் உபகோட்டத்தில் 50சதவீதத்திற்கும் மேல் காலியிடங்கள் இருந்தால், ரூ.412, தினக்கூலி கொடுத்து 20 பேரை நியமிக்க தனியாரிடம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.  மின்வாரியப் பணி என்பது மிகவும் ஆபத்தான, அதேநேரத்தில் அர்ப்பணிப்புமிக்க பணியாகும். ஆனால் இதில்

தொடர்ச்சி 3ம் பக்கம்

;