tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

தங்கம்  விலை உயர்வு

சென்னை, ஜூன் 4- பங்குச்சந்தை சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம்  சவரனுக்கு ரூ.632 அதிரடி யாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.79 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,745-க்கும் சவரன் ரூ.53,960-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 20 காசு கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 98.50-க்கும் பார் வெள்ளி ரூ.98,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்

சென்னை, ஜூன் 4- அயனாவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பார்த்தசாரதி தெருவில் உள்ள மின் பகிர்மான பெட்டி ஞாயிறன்று நள்ளிரவில் உயர் மின் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறி யது. உடனடியாக மணல்  மற்றும் அருகில் இருந்த  தீயணைப்பு கருவிகளைக் கொண்டு பொதுமக்கள் தீயை அணைத்தனர். தகவல றிந்து வந்த மின்வாரிய ஊழி யர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 

;