tamilnadu

img

அரையாண்டுத் தேர்வும் ரத்தாகிறது....

சென்னை:
தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வை தொடர்ந்து அரையாண்டுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அளிக்கப்பட்டது. பதினோராம் வகுப்புக்கு ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டன.கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்ததால் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.இதனால் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படு கின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தி உள்ளன.இதைத்தொடர்ந்து அரையாண்டு தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.வழக்கமாக அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். ஆனால் இதுவரையில் பள்ளிகள் திறக்கப்படாததால் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை.தனியார் பள்ளிகள் மட்டும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மாதிரி தேர்வாக நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரியிடம் கேட்ட போது, பள்ளியே திறக்கப்படவில்லை. அரையாண்டு தேர்வு எப்படி நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.