சென்னை, மே 20- 13 ஆண்டுகளுக்கு முன்பு காணா மல் போன சிறுமியை ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கண்டுபிடிக்க காவல் துறையினர் முயற்சி எடுத்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு என்று அழை க்கப்படும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் தற்போது பயன் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகை யில் சென்னை காவல்துறையினர் கடந்த 2011ஆம் ஆண்டு மாயமான சிறுமி ஒருவர் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள் ளனர். சென்னை சாலிகிராமம் மஜீத் நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மகள் கவிதா 2 வயது குழந்தை யாக இருந்தபோது கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போனார். இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாய மான சிறுமியை தேடி வந்தனர். ஆனால் குழந்தை குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
சிறுமி மாயமான வழக்கு தற்போது குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வரு கின்றனர். 2 வயதில் மாயமான சிறுமி யின் புகைப்படத்தை வைத்து தற்போது 14 வயதில் வளர்ந்த பிறகு எப்படி இருப்பார் என்பதை ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் புகைப்படமாக உரு வாக்கியுள்ளனர்.
இந்த 2 புகைப்படத் தையும் ஒன்றாக வைத்து போஸ்டர் அடித்து காவல் துறையினர் வெளி யிட்டுள்ளனர். கவிதாவை பற்றி தகவல் தெரிந்த வர்கள் 9444415815, 9498179171 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கண்டுபிடித்து கொடுப்பவர் களுக்கு தக்க சன்மானம் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது மகளை காவல்துறையினர் தேடிய நிலையில், நிச்சயம் தனது மகள் திரும்ப கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கை யில் காத்திருக்கிறார் தந்தை கணேஷ்.