tamilnadu

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : ஒப்பந்தம் கோரியது அரசு

சென்னை, ஆக. 9 - கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித் திருந்தார். கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் வேக மாக நடைபெற்று வருகின்றன. இந்நிலை யில், ஒண்டிப்புதூர், எல் அண்டு டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலை. அரு கில் உள்ள இடம், சிறை மைதானம் ஆகிய 4 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் சாத்தியக்கூறு பற்றி அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு செய்திருந்தார். இந்நிலையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதா னம் அமைப்பதற்கான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.