tamilnadu

img

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மே 23ல் பணி ஓய்வு

சென்னை,மே 16-  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மே 23-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். அன்று அவருக்கு பிரிவுபச்சார விழா நடத்தப் படவுள்ளது.\

ஆங்கிலேயர் காலத்து சார்ட்டர்டு ஹைகோர்ட் என்ற பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த மும்பை அவுரங்காபாத்தைச் சேர்ந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா என்ற எஸ்.வி.கங்காபுர்வாலா 24.05.1962-ல் பிறந்தவர். எல்எல்பி தகுதிப்பட்டியலில் மூன்றாமிடம் பிடித்த இவர், கடந்த 1985-ம் ஆண்டு மும்பை பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.லோயாவின் சேம்பரில் சேர்ந்தார்.

எண்ணற்ற நிதி நிறுவனங்கள், பல கார்ப்பரேட் நிறுவனங்களில் வழக்கறி ஞராக பணியாற்றிய இவர், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா  பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞ ராகவும், பகுதி நேர விரிவுரையாள ராகவும் பணியாற்றினார். கடந்த  2010-ம் ஆண்டு மும்பை உயர் நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2022-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த எஸ்.வி.கங்காபுர்வாலா, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஓராண்டு மட்டுமே இவருக்கு பணிபுரிய வாய்ப்பு  கிடைத்தது. முக்கியத்துவம் வாய்ந்த  பல்வேறு தீர்ப்புகளை பிறப்பித் துள்ளார். இளம் வழக்கறிஞர்களை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டினார்.

;