tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தலைவர்களின் பிறந்த நாளில் பள்ளிகளில் இனிப்பு பொங்கல்
ரூ.4 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு

சென்னை, ஜூன் 18- முக்கியத் தலை வர்களின் பிறந்த  நாளில் மாணவர்  களுக்கு மதிய உண வுடன் இனிப்புப் பொங்கலும்வழங்க தமிழ்நாடு அரசு  உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயி லும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் அமலில் உள்ளது. அதேபோல 1 முதல்  5 வரை உள்ள ஆரம்பப் பள்ளி மாண வர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்  படுத்தி உள்ளார்.

இந்நிலையில், தற்போது முக்கிய  தலைவர்களின் பிறந்த நாளில் பள்ளி களில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள் ளது.

இதற்கு ஆகும் கூடுதல் செலவின மான 4 கோடி 27 லட்சத்து 19 ஆயிரத்து  530 ரூபாயை ஒதுக்கீடு செய்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு விரைவு பேருந்துப் பயணம்
ஜூலை 31 வரை கட்டண சலுகை ரத்து!

சென்னை, ஜூன் 18- அரசு விரைவுப் பேருந்துகளில் வார  நாட்களில் 10 சதவிகித அளவில் கட்ட ணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வரு கிறது. வார இறுதி நாட்கள், விடுமுறை  மற்றும் விசேஷ நாட்களில் தள்ளுபடி  இன்றி முழுக் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. இது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரு கிறது.

இந்நிலையில், ஜூன் 16 முதல் ஜூலை  31 வரை பயணிகள் வருகை அதி கரித்து, போக்குவரத்து நெரிசல் அதி கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. எனவே, மேலாண் இயக்குநரின் உத்தரவுப்படி, ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை குளிர்சாதன (ஏசி) வசதியுள்ள, வசதி இல்லாத, இருக்கை, படுக்கை கொண்ட பேருந்துகளுக்கு வார இறுதி  நாட்கள் கட்டணத்தையே அனைத்து நாட்களிலும் முழு கட்டணம் நிர்ணயம்  செய்து வசூலிக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளர், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
மக்களை ஏமாற்றி நாடகமாடும் ராமதாஸ்!
அமைச்சர் பொன்முடி சாடல்

விக்கிரவாண்டி, ஜூன் 18- விக்கிரவாண்டி தொகுதி இடைத்  தேர்தல் திமுக செயல்  வீரர்கள் கூட்டம் காணையை அடுத்த கொசப்பாளையத் தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் அன்னி யூர் சிவாவை அறிமுகப்படுத்தி பேசிய தேர்தல் பணிக்குழு தலைவரும் அமைச்ச ருமான க. பொன்முடி, “இந்த இடைத்தேர்  தலில் மக்கள் திமுகவுக்குத் தான் ஓட்டு  போடுவார்கள். காரணம் மகளிர் உரி மைத் தொகை, புதுமை பெண், கட்ட ணமில்லா பேருந்துப் பயணம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்களில் அவர்கள்  பயனடைந்துள்ளனர்” என்றார்.

“இடைத்தேர்தலை அதிமுக புறக்க ணித்துள்ளது. இதனால் அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. அதிமுகவினர் ஓட்டுகள் அனைத்தும் நிச்சயமாக இம் முறை நமக்குதான் வரும்” என்று கூறிய  பொன்முடி, “சமூக நீதி பற்றி பேசும் பாமக  நிறுவனர் ராமதாஸ், இத்தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ளார். சாதிவாரி  கணக்கு எடுப்பு பற்றி பேசும் ராமதாஸ், அதை ஒன்றிய பாஜக அரசு தான் எடுக்க  வேண்டும் என்பது தெரிந்தும், தெரியாத  மாதிரி நடிக்கிறார்” என்றும் குற்றம் சாட்டி னார்.

‘நெட்’ பாடத் திட்டத்தில் பேரிடர் மேலாண்மை
யுஜிசி தகவல்

சென்னை, ஜூன் 18- உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தகுதித் தேர்வில் பேரிடர் மேலா ண்மை பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள் ளது என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர். ஜோஷி வெளியிட்ட செய்திக் குறிப்  பில், “யுஜிசியின் 580-வது குழுக் கூட்டம்  கடந்த மே 15 அன்று நடைபெற்றது. இதில்,  நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நெட் தேர்வு தொகுதியில் பேரிடர் மேலாண்மை பாடம் புதிதாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை டிசம்பர் பரு வத்துக்கான தேர்வில் இருந்து அமலுக்கு வரும். இதற்கான பாடத்திட்டம் யுஜிசி யின் இணையதளத்தில் (https://ugcnet online.in) வெளியிடப்பட்டுள்ளது. கூடு தல் விவரங்களையும் மேற்கண்ட வலைத்  தளத்தில் அறியலாம்” என்று குறிப்பிட் டுள்ளார்.

‘கலைஞரின் கனவு இல்லம்’ ரூ.3,100 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூன் 18- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.  3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடி யிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி. கூரை யுடன் கூடிய வீடுகள் கட்டித் தருவது இத் திட்டத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசா ணையை வெளியிட்டது. 

இந்நிலையில், கலைஞரின் கனவு இல்லம்  திட்டத்துக்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை ஜூன் 25-ஆம் தேதிக்  குள் முடித்து ஜூலை 5ஆம் தேதி பணிகளை தொடங்குவதற்கான ஆணை வழங்க உத்தரவி டப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவம் விண்ணப்பிக்க ஜூன் 21 கடைசி 

சென்னை, ஜூன் 18- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூன் 21 கடைசி நாள் என்று  கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் அறி வித்துள்ளது. கால்நடை மருத்துவ பட்டப் படிப்புக்கு மொத்தம் 12,643 மாணவர்கள் விண்  ணப்பித்துள்ளனர். ஜூன் 21 மாலை 5 மணி  வரை adm.tanuvas.ac.in என்ற வாயிலாக  விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

;