tamilnadu

img

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தேர்தலில் கபில் சிபல் வெற்றி

சென்னை, மே 17- உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார். கபில் சிபல் மொத்தம் 1,066 வாக்கு கள் பெற்று அவரை எதிர்த்து போட்டி யிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராயை தோற்கடித்துள்ளார். பிரதீப் ராய்க்கு வெறும் 689 வாக்கு களே கிடைத்தன.

இதையடுத்து, கபில் சிபலுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற னர். அந்த வகையில், தமிழ்நாடு  முதலமைச்ச ரும் திமுக தலை வருமான மு.க. ஸ்டாலினும் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வழக்கறி ஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துக்கள்! அவரது வெற்றி பார் கவுன்சில் சுதந்திரமும் நமது அரசியலமைப்பு விழுமியங்களும் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதி செய் கிறது. இந்திய மக்கள் ஆழமாகப் போற்றும் நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த அவரது தலைமையின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்வார்டு சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவரான கபில் சிபல்,  இந்தியாவின் கூடுதல் வழக்கறிஞராக (சொலிசிட்டர் ஜெனரலாக) 1989-90 காலகட்டத்தில் பதவி வகித்தவர். ஐமுகூ ஆட்சியில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ள கபில் சிபல், 1995-1996 மற்றும், 1997, 1998 ஆண்டுகளிலும் வழக்கறிஞர் சங்க தலைவராக செயல்பட்டுள்ளார். 

தற்போது, மீண்டும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் கபில் சிபல் நான்காவது முறையாக பார் கவுன்சில் தலைவராகியுள்ளார்.