tamilnadu

img

விவசாய விரோத வேளாண் சட்டங்களை ஆதரித்து தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டார் முதல்வர்.... ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை:
 தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்ட குழு சார்பில் மணலி மார்க்கெட்டில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் கட்சியின் அரசியல்தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்பங்கேற்று பேசினார். 

இப் போராட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

வரலாறு காணாத அளவில் லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வேளாண் விளை பொருட்களையும் அதானி, அம்பானி கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளில் ஒப்படைக்கும் திட்டம் தான் இந்தவேளாண் திருத்த சட்டம்.விவசாயிகளின்கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்து வருவதால் வருகிற டிசம்பர்8 அன்று  இமயம் முதல் குமரி வரை முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த பாரத் பந்த் போராட்டத்திற்கு 5 இடதுசாரி கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன. அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறும் நடிகர் ரஜினி விவசாயிகளுக்கு விரோதமான இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பாரா? கரும்பு சாகுபடியை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் விவசாயிகள் இந்த மோசமான சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

நீதிமன்றம் செல்ல முடியாது
கடந்த காலத்தில் ஏமாற்றப்பட்ட கரும்பு விவசாயிகள் நீதிமன்றம் சென்று தங்கள் நியாயத்தை  கேட்டுள்ளனர். ஆனால்மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் சட்டத்தில் இனி கரும்பு விவசாயிகள் நீதிமன்றம் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்படும். சிறு குறு பணக்கார விவசாயிகள் நெல் சாகுபடிக்கு செலவு செய்யப்படும் தொகையில் 50 விழுக்காடு கூடுதலாக தீர்மானிக்க வேண்டும் என்கிற எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை இனி  செல்லாது. தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வேளாண் சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்.ஏனெனில் குறைந்த பட்ச விலை தீர்மானிப்பது குறித்து எந்த உத்தரவாதமும் இந்த சட்டத்தில் இல்லை. உற்பத்தி செய்யப்படும் நெல் கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது குறித்து எந்த தகவலும் இதில் இல்லை. தமிழகத்தில் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு தமிழகஅரசு ரூ.8000 கோடி பாக்கி வைத்துள்ளது.இதனை பெற நீதிமன்றம் செல்லும் அதிகாரம்கூட இந்த வேளாண் சட்டத்தில் இல்லை. தமிழகமக்களுக்கும் விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்துள்ள விவசாயி முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி மார்க்சிஸ்ட்டுகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றார்.

;