சி.சி.எல். இன் விதிகளின்படி, ஊழியரின் சேவை காலத்தில் ஊழியர் இறந்தால் ஒரு சட்டப்பூர்வ சார்புடையவர்க்கு வேலை வழங்க வேண்டும் என உள்ளது. இந்த நிலையில், வேலையில்லாத ஒருவர் தந்து தந்தையை வேலைக்காக ஜார்கண்ட் மாநிலத்தில் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் பர்ககானாவில் உள்ள சி.சி.எல் மத்திய பணிமனையில் தலைமை பாதுகாப்பு காவலராக கிருஷ்ணா ராம் (55) பணியாற்றி வருகிறார். இவருக்கு ராமின் (35) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த வியாழனன்று அதிகாரி தொண்டை அறுத்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவரது ராமியிடன் விசாரணை நடத்திய போது, அவரது வாக்கு மூலத்தின் மூலம் வேலை இல்லாத நிலையில் இருந்து வந்ததால், வேலை வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தையை அவரே கொன்றதாக ஒப்புக்கொண்டார் என காவல்துறையினர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். சி.சி.எல்.விதிகளின் படி, ஒரு ஊழியர் சேவை காலத்தில் இறந்தால் சட்டப்பூர்வ சார்புடைய வேலை வழங்க வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.