tamilnadu

மெரினா முதல் பெசன்ட் நகர் வரை ‘ரோப் வே’ திட்டம்

சென்னை, ஜூன் 3- சென்னை மெரினா கடற்கரையை பெசன்ட் நகருடன் இணைக்கும் வகையில் 4.6 கி.மீ தூரத்திற்கு ரோப்  வே திட்டத்திற்கான விரிவான சாத்திய க்கூறு அறிக்கை விரைவில் உறுதி செய்யப்பட உள்ளதாக  தகவல் வெளி யாகியுள்ளது.

சென்னை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரை தான். இந்நிலையில் ஞாயிறு மற்றும் விடு முறை நாட்கள் வந்தால் சென்னை வாசிகள் பெரும் படையெடுப்பது மெரினாவுக்குதான். அதே போல் பல்வேறு பணிகளுக்காக சென்னைக்கு வரும் மக்களும், சுற்றுலாப் பயணிகள் மெரினாவுக்குச் சென்று விட்டு தான் செல்வார்கள். தமிழகத்தை பொறுத்தவரை பழனி  முருகன் கோவிலில் மட்டும் தான் ரோப் கார் சேவை உள்ளது.

இனி சென்னை வரும் மக்களும் வானத்தில் பறக்கும் வகையில் மெரினாவில் இருந்து பெசன்ட் நகர் வரை ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ்  மேனேஜ்மென்ட் நிறுவனம், இந்த ரூ.285 கோடி திட்டத்தை செயல்படுத்த விரி வான திட்ட அறிக்கையை தயாரிக்க  உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின் றன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது, மாநில அரசிடம் இருந்து இந்த திட்டத்திற்கான கொள்கை ரீதியான அனுமதி பெற்றுள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள மாதிரி நடத்தை விதிகள் காரணமாக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை  முன்னதாக தயாரிக்க முடியவில்லை  என்றும், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டவுடன் திட்டத்திற்கான ஏலங்கள் கோரப்படும் என்றும் தெரி வித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்திற்கு சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்திடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும். மேலும் சில நிலங்களை இந்த திட்டத்திற்கு கைய கப்படுத்த வேண்டி இருக்கும் என்றும் இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக காலம் எடுக்கும் என்றும் தெரிவித் துள்ளார். நகர்ப்புற நெரிசலை குறைக்கவும் மெரினாவிலிருந்து எலியட்ஸ் கடற்கரை வரை சுற்று லாவை மேம்படுத்தவும் இடையில் ஒரு நிலையத்துடன் இந்த திட்டம் வடி வமைக்கப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்காக, கழற்றக் கூடிய  வகையில் மோனோ கேபிள் கொண்டு  அமைப்புகள் பயன்படுத்தப்பட உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அனுமதிகளும் கிடைத்து நிலம் கையகப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் இணைந்து ஹைப்ரிட் ஆன்யூட்டி முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பணிகளை முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

;