தருமபுரி, நவ. 22- கடத்தூர் அருகே குண்டும், குழியு மாக மாறிய சாலையை சீரமைக்க அப் பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், கடத்தூரில் கடந்த 2014-15ஆம் ஆண்டு ரூ.4.10 கோடி மதிப்பீட்டில் 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன் கட்டப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, பையர்நத்தம், தென்கரைக்கோட்டை, ரேகடஅள்ளி, ஈச்சம்பாடி உள்ளிட்ட 300க்கும் மேற் பட்ட கிராமங்களில் உள்ள ரேசன் கடைக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் கள் இங்கு இருப்பு வைக்கப்பட்டுள் ளது. மாதந்தோறும் அந்தந்த பகுதி யில் உள்ள ரேசன் கடைகளுக்கு இங்கி ருந்து அத்தியாவசிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படு கின்றன. இந்நிலையில், நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளது. இதனால், சரக்கு எடுத்துச் செல்லும் லாரிகள் அடிக்கடி பழுத டைகிறது. மேலும், வாகனங்கள் பழு தாவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற் படுகிறது. இங்கு தரமான தார்ச்சாலை அமைக்க பலமுறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தியும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் சிதலம டைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.