tamilnadu

img

ரெப்கோவை வங்கியாகவே கருத முடியாது - உயர்நீதிமன்றம் 

ரிசர்வ் வங்கியின் உரிமம் பெறாததால் ரெப்கோவை வங்கியாகவே கருத முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடன் செலுத்தாததால் ரெப்கோ வங்கி அனுப்பியிருந்த நோட்டீசை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரெப்கோ, ரிசர்வ் வங்கியின் உரிமம் பெறாமல் வங்கியை போல் செயல்படுவது சட்ட விரோதம் என மனுதாரர் தெரிவித்துள்ளார். உரிமம் பெற ரெப்கோ கொடுத்த மனு மீது ரிசர்வ் வங்கி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று மனுதாரர் தகவல் அளித்துள்ளார். இதைஏற்றுக் கொண்ட நீதிமன்றம்  மனுதாரருக்கு ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 
 

;