வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணியின் போது ஏற்பட்ட மின் விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்கு தலைமை பொறியாளர் சித்ரா 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வியாழனன்று (ஜன. 9) வழங்கினார். உடன் சிஐடியு நிர்வாகிகள் சுந்தரம், ஜெயவேலு, சலில், பிரதாப் ஆகியோர் உள்ளனர்.