திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

தமிழகத்தில் இறுதி வாக்காளர்  பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. 
இந்நிலையில் இன்று தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 
இவர்களில் ஆண்கள்- 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் உள்ளனர். பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் இருக்கிறார்கள். இத்துடன் 3-ம் பாலித்தவர் 7 ஆயிரத்து 246 பேர் உள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845- வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5.09 லட்சம் பேர் நீக்கம்; புதிதாக 21.39 லட்சம் வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளது.

;