tamilnadu

img

பிப்.2 முதல் சிறை நிரப்பும் போராட்டம்.... தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு....

சென்னை:
அரசு ஊழியர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் போராட்டம்நடத்தி வருகிறது. மேலும், கடந்த 2 வருடமாக பல்வேறு முறையீடுகளின் மூலம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சங்கத்தின் முன்னாள்மாநிலத் தலைவரும், ஜாக்டோ -ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான மு. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீதான 17பி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும். 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள்,  நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியர்களுக்கு  வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.தமிழக அரசில் பணிபுரியும் சி- மற்றும் டி- பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதம் ஊதியத்தை உச்சவரம்பின்றி மிகை ஊதியமாக வழங்க வேணடும். ஏ- மற்றும் பி -பிரிவு ஊழியர்களுக்கு  சிறப்பு மிகை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் அவுட் சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும். 

தமிழக அரசுத்துறைகளிலுள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர்மறியல்  மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது.

பிரச்சாரம்
இதனையொட்டி 2021 ஜனவரி 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரச்சாரஇயக்கமும், ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் 7 மையங்களில் மண்டல அளவில் போராட்ட ஆயத்தமாநாடுகளும், ஜனவரி 27 ஆம் தேதி மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு மதுரையிலும் நடைபெறும்.இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 2 முதல் மாநிலம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதுகில் குத்திய முதல்வர்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மு.அன்பரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த காலங்களில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளோம். அவர்கள் அனைவரும் எங்களை நெஞ்சில் குத்தினர். தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்துகிறார். போராட்டத்தை கைவிட்டு வந்தால் பேசி தீர்ப்போம் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் அதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார்.
வாக்குறுதி அளித்து 23 மாதங்களாகியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனவே அரசு ஊழியர், ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்நடத்தியதற்காக 5 ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் பழிவாங்கப்பட்டுள்ள னர். ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுமறுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக் கான அரசு ஊழியர்கள் ஓய்வுபெறமுடியாமலும், ஓய்வூதிய தொகைகளை பெற முடியாமலும் உள்ளனர். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அரசு ஊழியர்கள் பழிவாங்கப்படுவதும், அதன் தொடர்ச்சியாக அந்த ஆட்சி தூக்கி எறியப்படுவதும் நிகழ்ந்துள்ளது. வரவிருக்கிற தேர்தலில் பகை முடிப்போம் என்றும் அவர் கூறினார்.

;