tamilnadu

img

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி

சென்னை,மே 24பூந்தமல்லி சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி 1 லட்சத்து 36ஆயிரத்து 905 வாக்குகள் பெற்றார்.இவர் அதிமுக வேட்பாளர் வைத்தியநாதனை விட 60ஆயிரத்து 96வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.  அமுமுக வேட்பாளர் 14,804 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 10871 வாக்குகளும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் 11772 வாக்குகளும் பெற்றனர்.மொத்த பதிவான வாக்குகள் 2 லட்சத்து 56 ஆயிரத்தி 108ஆகும்.பூவிருந்தவல்லி இடைத் தேர்தலுக்கான பொது பார்வையாளர் ஷோபா,மற்றும்  பூவிருந்தவல்லி சட்டமன்ற இடைதேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவள்ளுர் சார் ஆட்சியர் த.ரத்னா ஆகியோர் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி சான்றிதழை வழங்கினார்கள். ஆவடி நாசர், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதவதி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.