பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் விருது வழங்கும் விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், புதுக்கோட்டை மருத்துவர் நா.ஜெயராமன், திருமுருகன்காந்தி ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி பெரியார் விருது வழங்கினார். தந்தைபெரியார் பொதுவுடைமைச் சிந்தனைகள் புத்தக தொகுப்பாசிரியர் புலவர் பா.வீரமணி, முனைவர் மு.நாகநாதன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தி.க. துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.