வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன் மீது தமிழக கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.
இந்நிலையில் சிறையில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு வாதிட்டது. நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் அடுத்த ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.  வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


 

;